Police beat Scheduled Caste people in public; The verdict after 7 years

திருவண்ணாமலையில் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களை பொதுவெளியில் கொடூரமாக தாக்கியதோடு ஜாதியை குறிப்பிட்டு அத்துமீறலில் ஈடுபட்ட காவலர்கள் மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

கடந்த 2016 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தோக்கவாடி என்ற பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகன் உள்ளிட்டோரை காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர் நம்மாழ்வார், விஜயகுமார் ஆகியோர் ஜாதி ரீதியாக திட்டியதோடு, கண் மூடித்தனமாக பொது இடத்திலேயே வைத்து கொடூரமாக தாக்கினர்.

Advertisment

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் பொது இடத்தில் பட்டியலின மக்களை தாக்கியதோடு ஜாதி பெயரை குறிப்பிட்டு அவர்கள் மீது அத்துமீறலில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மூன்று காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. காவலர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து 12 வாரங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி இளந்திரையன் மூன்று பேரிடம் இருந்தும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் வசூலித்து அதனை பாதிக்கப்பட்ட நபர்களிடம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

nn

இந்த வழக்கில் வாதாடிய பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இந்த வழக்கில் காவல் அதிகாரிகளையே சப்போர்ட் பண்ணி பேசினார்களே தவிர நடந்த விவரங்கள் என்ன என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் ஆர்டிஓ என்கொயரில் இவர்கள் செய்தது தப்புதான்; இவர்கள் மீது துறையில் இறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்லியும் கூட தமிழக அரசு இந்த மூன்று காவல் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏழு வருடங்களாக நிலுவையில் இருந்த வழக்கில் இன்று இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது'' என்றார்.

Advertisment