Advertisment

பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு போலீசார் தடை

Police bans RSS rally in many districts

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருந்தது.

Advertisment

காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கி பேரணிகளை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக அனுமதி கோரப்பட்ட நிலையில், திருச்சி, கடலூர், வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதேபோல் ராமநாதபுரம், திண்டுக்கல், பழனி, தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

Advertisment

இந்த அறிவிப்பு இரவோடு இரவாக காவல்துறை மூலம் அனுமதி கோரிய ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாககூறப்படுகிறது. குறிப்பிட்ட மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கம் தொடர்பாக சூழல்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் தங்களால் இந்த பேரணி குறித்து கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும் எனவே அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.

rally
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe