சென்னை வியாசர்பாடியில் போலீஸ்காரரை தாக்கிய ரவுடி வல்லரசுவை என்கவுன்டரில் போட்டுத் தள்ளிய சென்னை காவல் துறை, அதற்கு முந்தைய நாள் 4 இளைஞர்களிடம் அடி வாங்கிய போலீஸ்காரருக்கு இடமாறுதலை பரிசாக வழங்கி இருக்கிறது. இதனால், அவர் அடி வாங்கும் வீடியோ இப்போது, சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

 police attacked by strangers... The next video release.?

சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பணியாற்றும் கார்த்திகேயன், கடந்த 13-ந்தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சுலைமான், ரிஸ்வான், ராயபுரத்தை சேர்ந்த முகம்மது அக்பர், முகமது நவ்ஷத் ஆகியோர் அந்த பகுதியில் திருநங்கைகளிடம் பாலியல் தொழில் தொடர்பாக தகராறு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, போலீஸ்காரர் கார்த்திகேயன் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியிருக்கிறார். மதுபோதையில் இருந்த 4 பேரும் கார்த்திகேயனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். மேலும், போலீஸ்காரரிடம் இருந்த வாக்கி டாக்கியையும் பறித்து உடைத்து விட்டனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கார்த்திகேயன், சக போலீஸ்காரர் குழந்தைவேலுவை செல்போனில் உதவிக்கு அழைத்தார்.

Advertisment

அவர் சம்பவ இடத்திற்கு வந்து, மற்ற போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இந்த இடைப்பட்ட நேரத்தில் 4 பேரும் கார்த்திகேயனை கண்மூடித்தனமாக அடித்து உதைத்தனர். இதன்பிறகு போலீஸ் படை வந்ததால், 4 பேரும் காரில் தப்பியோடினர். அப்போது போலீஸ்காரர் குழந்தைவேலுவையும் மோதிவிட்டு அந்த கார் சென்றது.

 police attacked by strangers... The next video release.?

பின்னர் ஒரு வழியாக போலீஸ் படை விரைந்து சென்று சினிமா பாணியில் மடக்கி, 4 பேரையும் கைது செய்து ரிமாண்டிற்கு அனுப்பி வைத்தனர். நிலைமை இவ்வாறு இருக்க, அடி வாங்கிய போலீஸ்காரர் கார்த்திகேயனை ஜே.சி டீமிற்கு இடமாற்றம் செய்து அனுப்பினார் உதவி ஆணையர் கோவிந்தராஜ். அதேபோல், 4 பேரையும் ரிமாண்டிற்கு அனுப்பிய 4 போலீஸாரையும் உதவி ஆணையர் அழைத்து விசாரணை நடத்தி உள்ளார். (அதாவது, போலீஸாரை தாக்கிய இளைஞர்கள் 4 பேரையும், இவர்கள் அடித்து துன்புறுத்தினார்களாம்.)

Advertisment

மேலதிகாரிகளின் இந்த செயல் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஜே.சி டீமிற்கு மாற்றப்பட்ட கார்த்திகேயன் நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார். உதவி ஆணையரின் விசாரணைக்கு ஆஜரான மற்ற 4 போலீஸாரும் விடுப்பில் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் உண்மை நிலை தெரியவேண்டும் என்பதற்காக போலீஸ்காரர் கார்த்திகேயன் அடி வாங்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.