கஜா புயல் நிவாரணம் முழுமையாக வழங்கப்படாததால் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் திருவாரூர் அருகே நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
திருவாரூர் சட்டமன்ற தோ்தல் வருகிற ஜனவரி 28ம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இன்று கஜாபுயல் பாதிப்பு காரணமாகவும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்பதற்காக திருவாரூர் சட்டமன்ற தோ்தல் ரத்து செய்யப்பட்டது. ஆனால் எந்த காரணத்திற்காக தோ்தல் நிறுத்தப்பட்டதோ அந்த நிவாரண பொருட்கள் வழங்க வலியுறுத்தி திருவாரூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகே எருக்காட்டூர் கிராமத்தில் கஜாபுயலால் பாதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்தும் இதுவரை நிவாரணம்வழங்கப்படவில்லை. இது மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தபயனுமில்லை. இதனையடுத்து கமலாபுரம் கடைவீதியில் எருக்காட்டூர் கிராமமக்கள் 500க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொரடாச்சேரி காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் நிவாரணம் வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனகூறினர். இதனால் காவல்துறையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது.இதனையடுத்து காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
நிவாரண பொருட்கள் வழங்ப்படவில்லை என இடைத்தோதல் நிறுத்தப்பட்ட நிலையில் நிவாரணம் கேட்ட ஏழை எளிய பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்புபைஏற்படுத்தியுள்ளது.