Police arrested the youth

Advertisment

திருச்சி மரியம் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் வினோத் (42). இவர் திருச்சி அலங்க நாதபுரம் பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் மீண்டும் கடையை திறக்க சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடைக்குள் இருந்த 5 சேலைகள், 25 நைட்டிகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து வினோத் காந்தி மார்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்து திருச்சி தாரநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சாதிக்பாட்சா, திருச்சி சந்தானபுரம் கல்பாளையம் சின்ன ஒட்ட தெரு பகுதியைச் சேர்ந்த இம்ரான்கான் ஆகிய 2 இளைஞர்களை கைது செய்தனர். அவர்கள் வசம் இருந்து திருட்டுப்போன சேலை மற்றும் நைட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.