டிக் டேக் வீடியோவில் போலீசாருக்கு மிரட்டல் விடும்படி கானா பாட்டு பாடிய இளைஞர்களைக் கைது செய்த போலீசார் அவர்களுக்கு எடுத்த பாடத்திற்குப் பிறகு அதே இளைஞர்கள் போலீசாரை புகழ்ந்து பாடல் பாடி டிக் டாக் வீடியோவெளியிட்டுள்ளனர்.
கடந்த வருடம் ராயபேட்டையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலரை அரிவாளால் வெட்டிய ரவுடி ஆனந்தனைபோலீசார் என்கவுண்டர் செய்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த சம்பவம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் மயிலாப்பூர் கைலாசபுரம் இடுகாட்டில் ரவுடி ஆனந்தனின் நினைவுநாளை கொண்டாடிய அவனது கூட்டாளிகள் காவல்துறையினருக்கு மிரட்டல் விடும் வகையில் கானா பாடல் ஒன்றை பாடி டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்தப்பாட்டில் ஆனந்தனை கொன்றவர்களை பழிதீர்ப்போம் என வரிகள் போட்டு பாடினர். வெளியான அந்த வீடியோ உடனே வைரலானதை அடுத்து வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞர் கூட்டத்தை கைது செய்தது காவல்துறை.
கைது செய்து என்ன செய்தார்களோ தெரியவில்லை தற்பொழுது அதே காவல்துறையை புகழ்ந்து அதே நபர்கள் புகழ்ந்து கானா பாடல் பாடி டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளனர்.