வேலூர் மாநகருக்குட்பட்ட விருப்பாட்சிபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபானத்தை வீட்டில் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் விற்பனை செய்து வருவதாக, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு வந்த ரகசிய தகவலின் பேரிலும், எஸ்.பியின் உத்தரவின் பேரிலும் வேலூர் டி.எஸ்.பிதிருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை காவலர்கள் நோட்டமிட்டு வந்தனர்.
கள்ளத்தனமாக வீட்டில் பதுக்கி வைத்து டாஸ்மாக் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஜான்சிராணி மற்றும் சாந்திஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பாகாயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.