/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1240.jpg)
திருச்சி சமயபுரம் ஆசிரியர் காலனியை சேர்ந்த பிரதாப்(36). இவர் தனது காரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். காரை யாரோ ஒருவர் திறக்கும் சத்தம் கேட்டு எழுந்துள்ளார். ஜன்னல் வழியாக பார்த்தபோது பெண் ஒருவர் காரை திறந்து கொண்டிருப்பதை கண்டார். பின்பு வெளியில் வந்து அந்தப் பெண்ணை கையும் களவுமாக பிடித்து சமயபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிடம் இருந்த செல்போனை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணைநடத்தி வந்தனர். அதில் அந்த பெண் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஆனந்தி(22) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண் வைத்திருந்த செல்போன்சமயபுரம் மருதூர் ரோடு பகுதியில் வசிக்கும் லட்சுமணன் (64) என்பவர் வீட்டுக்குள்நுழைந்து திருடப்பட்டது என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஆனந்தி மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)