தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டவரையும் அவர் சார்ந்த சமூக பெண்களையும் இழிவாக பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் வேகமாக பரவி பொன்னமராவதியில் மிகப் பெரிய போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து அங்கு தடியடி கல்வீச்சு ஏற்பட்டது.

protest

Advertisment

இதில் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார், கலவரத்தில் ஈடுபட்ட ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கலவர வீடியோக்களை பார்த்து அடையாளம் காணப்படும் பணியும் நடைபெற்றுவருகிறது.

Advertisment

இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேலும் போராட்டம் பரவியுள்ளதால் வெளிமாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 1500 போலீசார் தற்போது பணியில் உள்ளனர்.