/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3_232.jpg)
விழுப்புரம் மாவட்டம் காவனிப்பாக்கம் அருகே மலட்டாறு பகுதியில் ஒரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை அந்த பகுதியில் ஆடுமாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்துவிட்டு விழுப்புரம் தாலுகாபோலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் எரிந்த நிலையில்கிடந்த பெண் யார் என்று விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்ட பண்ருட்டி அருகே உள்ள கரும்பூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவர் தனது மனைவி வசந்தியை(31) காணவில்லை என்று காவல்நிலையத்தியில் புகார் அளித்துள்ளார். மேலும் , எனது மனைவி வசந்தி விழுப்புரத்தில் உள்ள ஒரு ஜவுளைக்கடை முதலாளி வீட்டில் வேலை செய்துவருகிறார். வழக்கம் போல வீட்டு வேலைக்கு சென்ற வசந்தி மறுநாள்வரை வீடு திரும்பவில்லை. இது குறித்து அங்கு சென்று விசாரித்தால் வசந்தி வேலைக்கு வரவில்லை என்று கூறுகிறார்கள். எங்கு தேடியும் கிடக்கைவில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மலட்டாறு பகுதியில் எரிந்த நிலையில் கிடைத்த பெண்ணின் உடலைஅடையாளம் காட்ட குப்புசாமியை போலீசார் அழைத்துசென்றனர். அந்த உடலை பார்த்த குப்புசாமி எரிந்த நிலையில் கிடந்த பெண் தனது மனைவி வசந்திதான் என்று உறுதிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியபோலீஸ் வசந்தியின் தொலைபேசியின் எண்ணைவைத்து அவருடன் பேசிய நபர்களை அழைத்து விசாரணை செய்தனர்.
இறுதியில் பண்ருட்டி அருகே உள்ள ரெட்டி குப்பத்தை சேர்ந்த தெய்வக்கண்ணு(56) என்பவருடன் வசந்தி அடிக்கடி பேசி வந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தெய்வக்கண்ணைப் பிடித்துவிசாரித்த போலீஸிடம் தான் தான் வசந்தியை கொலை செய்ததாக தெய்வக்கண்ணு ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், துணிக்கடை வீட்டில் வேலை செய்து வந்தபோது பணம் கொடுத்துவாங்குவதுமூலமாக தெய்வக்கண்ணுவுக்கும் வசந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்துதெய்வக்கண்ணு, வசந்திக்கு பணம் நகை அவர் கேட்ட பொருள்களை எல்லாம் வாங்கி கொடுத்துள்ளார்.
இதையடுத்து வசந்தி தீடிரென தெய்வக்கண்ணுவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் வசந்திக்கு வேறு ஒரு இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது குறித்து தெய்வக்கண்ணுவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தெய்வக்கண்ணு பலமுறை வசந்தியிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அதற்கு எல்லாம் வசந்தி சரிவர பதிலளிக்கவிலலை. இதனால் வசந்தியை தீர்த்துக்கட்ட முடிவு செய்த தெய்வக்கண்ணு, ஆசை வார்த்தை கூறி கடந்த மாதம் 4 ஆம் தேதி தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று காலை 11 மணிக்கு வசந்தியும் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு தனது இருசக்கர வாகனத்துடன் தயாராக இருந்த தெய்வக்கண்ணு வசந்தியை அழைத்துகொண்டு மலட்டாற்று பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே வங்கி வைத்த மதுவை குடித்துவிட்டு தெய்வக்கண்ணு வசந்தியுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வசந்திக்கு கம்பங்கூலில் மயக்கமருந்தை கலந்துகொடுத்துள்ளார்.
பாதி மயக்கத்தில் இருந்த வசந்தியிடம் வேறு ஒரு இளைஞருடன் இருக்கும் தொடர்பு குறித்து தெய்வக்கண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.இது இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாற ஆத்திரப்பட்ட தெய்வக்கண்ணு, வசந்தியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்பு உடலை புதரில் வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து கிளம்பியுள்ளார். இந்த நிலையில் வசந்தியை காணவில்லை என்று அவரது கணவர் குப்புசாமி போலீஸில் புகார் கொடுத்ததை அறிந்த தெய்வக்கண்ணு விசாரணையில் தான் மாட்டிகொள்வேன் என்று மீண்டும் மலட்டாறு சென்று வசந்தியின் உடலில் பெட்ரோல் ஊறி எரித்துவிட்டு சென்றதாக தெய்வக்கண்ணு கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தெய்வக்கண்ணு மீது கொலை வழக்கு பதிவுசெய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)