Police arrested in kallakurichi case

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு எனும் 48 வயது கூலித்தொழிலாளி. இவர், நேற்று அந்த ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பச்சமுத்து என்பவர் மதுபோதையில் வேலுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

இதில் ஆத்திரமடைந்த பச்சமுத்து அங்குக் கிடந்த தடியை எடுத்து வேலுவின் தலையில் சரமாரியாகத்தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த வேலு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலையத்திற்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட வேலுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு உடனடியாக வேலுவை கொலை செய்த பச்சமுத்து என்பவரை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பச்சமுத்துவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment