Advertisment

40 செல்ஃபோன், 6 பைக், 3 சவரன் நகைகள், 4 சிறுவர்களின் துணிகரம்... கைது செய்த காவல்துறை

tamilnadu police

Advertisment

சென்னை வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இதனையடுத்து தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக திருடப்பட்ட செல்ஃபோன் எண்களை கண்காணித்து வந்தனர். அதில் ஒரு எண் மட்டும் பயன்பாட்டில் இருந்தது தெரியவந்தது. இதை துருப்புச் சீட்டாக வைத்து விசாரணையில் ஈடுபட்டபோது, வழிப்பறியில் ஈடுபட்டது4 சிறுவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அவர்களை தற்போது காவல்துறையினர் கைதுசெய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த 40 செல்ஃபோன்கள், 6 பைக்குகள், 3 சவரன் நகைகள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Inquiry police Robbery Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe