Police arrested the person who drug addict

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது பா.வில்லியனூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவரின் மகன் 50 வயது மாதவராஜ். கூலித் தொழிலாளியான இவர், சம்பாதிக்கும் பணத்தில் தினசரி குடிக்கும் பழக்கம் உள்ளவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (19.11.2021) குடிபோதையில் இருந்த மாதவராஜ், வாணியம்பாடி என்ற பகுதியில் உள்ள ஒரு மினரல் வாட்டர் கம்பெனிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த ஊழியர்களிடம் இலவசமாக வாட்டர்கேன் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.

Advertisment

அங்கிருந்த பணியாளர்கள், வாட்டர் கேன் இலவசமாக தர முடியாது. பணம் கொடுத்தால் வாட்டர் கேன் தரப்படும் என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாதவராஜ், வாட்டர் கம்பெனிக்கு வெளியே வந்து அவசர போலீஸ் 100க்கு ஃபோன் செய்து,வாணியம்பாடியில் உள்ள மினரல் வாட்டர் கம்பெனியில் இன்னும் சற்று நேரத்தில் பயங்கரமான வெடிகுண்டு வெடிக்க உள்ளது என்று கூறிவிட்டு செல்ஃபோனைத் துண்டித்துவிட்டார். இதுகுறித்த தகவலை அவசர போலீஸ் வளவனூர் போலீசாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

Advertisment

உடனடியாக வளவனூர் போலீசார் வெடிகுண்டு வெடிக்கும் என தகவல் அனுப்பிய ஃபோன் அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிந்து, ஃபோன் செய்த போதை ஆசாமி மாதவராஜை கைதுசெய்தனர். தனக்கு இலவசமாக மினரல் வாட்டர் தராத வாட்டர் கம்பெனிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி போலீசாரல் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் வளவனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.