குமரி மாவட்டம், முட்டம் தூய குழந்தை ஏசு தெருவைச் சேர்ந்தஆன்றோசகாயராஜ், துபாயில் ஒருஹோட்டலில்சூப்பர்வைசராகஉள்ளார். இவரது மனைவிபவுலின்மேரி. இவர்களுடைய இரண்டு பிள்ளைகளில் ஒருவர் தந்தையுடன்துபாயில்வசித்துவருகிறார். இன்னொருவர் சென்னையில்இன்ஜினியரிங்படித்து வருகிறார். இதனால் முட்டத்தில் உள்ள வீட்டில்பவுலின்மேரியும்அவருடைய தாய்தெரசம்மாளும்வசித்து வந்தனர்.
பவுலின்மேரிவீட்டில் தையல் பயிற்சி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். இங்கு சுமார் 25-க்கும்மேற்பட்டபெண்கள் பயிற்சிக்கு வந்து சென்றனர். இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி இரவுபவுலின்மேரியின்வீட்டின்மின்சாரத்தைத்துண்டித்த நிலையில் வீட்டுக்குள்பவுலின்மேரியும்அவரின் தாய்தெரசம்மாளும்கொடூரமாகக்கொலைச்செய்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
இதுசம்மந்தமாககொலையாளியைக்கண்டுபிடிக்க மாவட்ட எஸ்.பி.ஹரிகிரன்பிரசாத் நேரடி பார்வையில் தக்கலை மற்றும்குளச்சல்டி.எஸ்.பி.க்கள்தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவந்தது. இதில், கொலையாளி பயன்படுத்திய ஒரு குல்லாயை வீட்டின்அருகிலிருந்துகைப்பற்றி அந்தகுல்லாவைபயன்படுத்தியவர் யார் என்பதுகுறித்துத்தெரிந்தவர்கள் தகவல் கூறச் சொல்லி காவல்துறையினர்வீடியோஒன்றை வெளியிட்டனர்.
கஞ்சாகோஷ்டியினரின்நடமாட்டம் அந்த பகுதியில் அதிகம் இருப்பதால், சிலஇளைஞர்களைப்பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அதிலும் துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில், தையல் பயிற்சிக்கு வந்த ஒவ்வொரு பெண்ணையும் தனித்தனியாக காவல்துறையினர் விசாரித்தனர். அதில், ஒரு பெண், “குமரி மாவட்டம்,கடியபட்டணத்தைச்சேர்ந்த மீன் பிடி தொழிலாளிஅமலசுதன்என்னை எப்போதும்பைக்கில்பின்தொடா்ந்துவருவார். நான் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்காததால்பவுலின்மேரியிடம்சொன்னேன்.
உடனே அவர் அவனிடம் சண்டை போட்டு எச்சரித்தார். அப்போது அந்த பெண் எடுத்தவீடியோவையும்போலீசில் கொடுத்தார்.போலீசார்அந்தவீடியோவைபார்த்த போதுஅமலசுதனின்இடுப்பில்போலீசார்கைப்பற்றிய குல்லாய் இருந்தது தெரியவந்தது. உடனேபோலீசார்அவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில்மொட்டைதலை கொண்ட அவர் ஏற்கனவே இரண்டுபெண்களைத்திருமணம் செய்து அவர்களுடன் வாழாமல் மேலும் பல பெண்களின் பின்னால் சுத்தி தொந்தரவு செய்துவந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் பல பெண்களிடமும் முறையற்ற தொடர்பிலும் இருந்துவந்துள்ளார்.
அவருக்கு அடிக்கடி குல்லா அணியும் பழக்கமும் இருந்துள்ளது.பவுலின்மேரி, அவரைமோசமாகதிட்டியதால் அவரைகொலைச்செய்யதிட்டமிட்டு 6-ம் தேதி இரவுமின்சாரத்தைகட் செய்து விட்டு, வீட்டுக்குள் புகுந்தஅமலசுதன்,அயன்பாக்ஸால்பவுலின்மேரிதலையில் அடித்து கொலை செய்துள்ளார். மேலும் சத்தம் போட்டதெரசம்மாளையும்அதேஅயன்பாக்ஸால்தாக்கிகொலைசெய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகையையும்பறித்துச்சென்றுள்ளார்.
அவர் தலையில் அணிந்திருந்த குல்லாயையும்,கொலைக்குப்பயன்படுத்தியஅயன்பாக்ஸையும்வீட்டுக்கு வெளியே உள்ள ஒரு தென்னை மர தோப்பில் வீசிவிட்டுச்சென்றுள்ளார். அடுத்த நாள் ஊர் மக்கள் மற்றும்போலீசரோடுநின்று கொண்டு கொலையாளியை உடனே கண்டுபிடிக்க வேண்டுமென்று ஆவேசமாகவும் பேசியுள்ளார்.கொலையைத்திசை திருப்ப இந்தகொலையைக்கஞ்சா கோஷ்டிகள் தான் செய்து இருக்க வேண்டும் என்றுபோலீசாரிடமும்கூறியிருக்கிறார். மேலும் யாருக்கும் சந்தேகம் வந்து விடாமல்இருக்கத்தலைமறைவாகாமல் ஊருக்குள்ளே தான் சுற்றி வந்துள்ளார். மேலும் நகைகளை அவருடன் முறையற்றத் தொடர்பில் இருக்கும் இரண்டு பெண்களிடம் கொடுத்துள்ளார்.
இதை எல்லாம் அறிந்த காவல்துறையினர்அமலசுதனைகைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.