சென்னையில் பிரபல ரவுடி சிடி மணி என்கிற மணிகண்டனை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டைபகுதியைச் சேர்ந்த சிடி மணி மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரவுடி சிடி மணி கடந்த 2007, 2009, 2012, 2015 ஆகிய ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில்கைதாகி ஜாமீனில் வெளிவந்த சிடி மணி தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.