The police arrested the cell phone thief!

Advertisment

திருச்சி மாவட்டம், துறையூர் கிராம்புர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (19). இவர், திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக திருவானைக்கோவில் நாகநாதர் டீக்கடை அருகே செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது. அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஆனந்த், ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மன்னார்புரம் காஜா நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (23) மற்றும் கே.கே நகர் வசந்தா நகர் பகுதியை சேர்ந்த அஜய் ராஜ் (22) உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.