Police arrested 5 people who misbehaved with the youth

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை நெடுஞ்சாலையில் பேருந்துக்காக காத்திருந்த தென்காசியை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி இருசக்கர வாகனத்தில் வந்த துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த வசந்த்(24) என்ற வாலிபர் அவரை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று இருங்களூர் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள வீட்டுக்கு அவரை அழைத்து சென்றார்.

அங்கு கஞ்சா, மதுபோதையில் இருந்த திருவானைக்காவல் கவியரசன் (வயது 19), யுவராஜ்(22), அய்யனார் (20) மற்றும் துவாக்குடியைச் சேர்ந்த ரவி போஸ்கோ (28) ஆகியோர் ஓரின சேர்க்கையில் ஈடுபடும்படி காளிராஜை கட்டாயப்படுத்தி உள்ளனர். அதற்கு மறுக்கவே ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

தொடர்ந்து அவரை வலுக்கட்டாயமாக கழிவறைக்கு அழைத்து சென்று, நிர்வாணமாக்கி, சேலை மற்றும் நைட்டி கட்டச் சொல்லி 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் காளிராஜை நெடுஞ்சாலையில் கொண்டுவந்து இறக்கிவிட்டு சென்றுள்ளனர். மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு சாலையில் மயங்கி கிடந்தவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சமயபுரம் காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

மேலும் காளிராஜிடம் நடத்திய விசாரணையில் தன்னுடைய நண்பரின் தம்பி விபத்தில் சிக்கி காயமடைந்ததால் திருச்சி சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள எஸ்ஆர்எம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக வந்து, அவரை பார்த்துவிட்டு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் திருச்சி செல்ல பஸ்சுக்காக காத்திருந்த போது வாலிபர் ஒருவர் தன்னை திருச்சிக்கு அழைத்து சென்றதாகவும், அவர்கள் தன்னை தாக்கி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் சமயபுரம் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்துள்ளனர். அப்போது போலீசார் கைது செய்ய முயன்ற போது தப்பிக்க முயற்சித்த வசந்த், ரவி போஸ்கோ ஆகியோருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் 5 பேரும் பிரபல ரவுடி பாட்டில் மணியின் கூட்டாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மிக கொடூரமான முறையில் அட்ராசிட்டி செய்து வந்ததுடன், வழிப்பறியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் திருநங்கை ஒருவரை பிடித்து அடித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வீடியோவையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.