Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில்,‘என்னுடைய தங்கை, அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார்.நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

Advertisment

இந்நிலையில்,எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது,எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர்எங்களிடம்,‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டுவாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார். அங்கு மறைந்திருந்த நான்கு பேரும்,ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி,அவர்கண் முன்னேஎங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’ எனக் குறிப்பிட்டிருந்தார்.அவர் அளித்த புகாரின் அடிப்படையில்,ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீதுகாவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில்,இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர்,இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது,ராஜ்குமாரும்,இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும்தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.