
திருச்சி, கே.கே.நகர் பகுதியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தவர் அரசுகுமார்(24). இவரது கடைக்கு அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வருவது வழக்கம். இதில் இருவருக்கும் காதல் மலர்ந்ததால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால், சிறுமிக்கு 17 வயது என்பதால் அரசுகுமார் சிறுமியை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
இருவரும் பெங்களுரு சென்று அங்கு திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், தனது மகளைக் காணவில்லை என்று கே.கே.நகர் போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சிறுமியைத் தேடிய போலீசார் திருப்பத்துாரில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் இருப்பது தெரியவர, அங்கு சென்று இருவரையும் அழைத்து வந்துள்ளனர். 17 வயது சிறுமியைத் திருமணம் செய்த அரசுகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.