
குருவிக்கார பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்த சம்பவம் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குருவிக்கார பெண்கள் ஊசிமணி, பாசிமணி, கொண்டை ஊசி, சீப்பு உள்ளிட்டவைகளை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் அங்கு குருவிக்கார இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுசீந்திரம் பகுதியை சேர்ந்த போதை ஆசாமி ஒருவர் அந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புறக்காவல் நிலைய பெண் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக சென்ற பெண் போலீசார் அந்த ஆசாமியிடம் விசாரணை நடத்த, அந்த போதை ஆசாமியை மன்னித்து விடும்படி காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். ஒரு கட்டத்தில் தப்பி ஓட முயன்ற வாலிபரை போலீசார் துரத்திச் சென்று பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.