Police arrest temple employee

Advertisment

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பணியாற்றும் பணியாளர்களுக்கென்று பணியாளர்கள் குடியிருப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்பில் நேற்று (23.11.2021) பெண்ணைத் தாக்கியதாக வரதன் என்ற பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமயபுரம் கோவிலில் பணிபுரியும் வரதனுக்கும் அருகில் உள்ள வளாகத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகள் சித்ராவுக்கும் நீண்ட நாட்களாக தகராறு இருந்துவந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வரதன் சித்ராவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ரா, சமயபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், கோயில் பணியாளர் வரதனை கைதுசெய்தனர்.