Police arrest teenager who was standing on the bus steps

Advertisment

திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி என்ற அரசுப் பேருந்து நடத்துனர். வழக்கம்போல் துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி பயணித்த பேருந்தில் நடத்துனராக வந்துள்ளார். அரியமங்கலம் பகுதியில் வந்தபோது ராமசாமி நடத்துனராக வந்த பேருந்தில் சீனிவாசன் என்ற வாலிபர் ஏறியுள்ளார்.

இந்நிலையில் அறியமங்கலம் மேம்பாலம் ஏறுகையில் சீனிவாசன் படியில் தொங்கி கொண்டிருப்பதைப் பார்த்த ராமசாமி படியில் தொங்காமல் மேலே ஏறி வர கூறியுள்ளார். அதை கண்டுகொள்ளாமல் பயணித்த சீனிவாசனை தொடர்ந்து வற்புறுத்தி படிக்கட்டில் நிற்காமல் உள்ளே ஏறி வர ராமசாமி கூறியதால் ஆத்திரத்தில் சீனிவாசன் ராமசாமியைத்தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து நடத்துனர் ராமசாமி சீனிவாசன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் சீனிவாசனை காவல்துறையினர் கைது செய்தனர்.