ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை நகரத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு வெளியே கூடைப்பின்னும் தொழில் செய்து பிழைப்பு நடத்திவருபவர் முனுசாமி என்கிற நபர். இவர் கடைக்கு வெளியே பிளாட்பார்மில் அமர்ந்துக்கொண்டு அடிக்கடி சரக்கு சாப்பிடுவது வழக்கம். அதேபோல் சில தினங்களுக்கு முன்பு கடைக்கு அருகில் உள்ள ஒரு பங்க் கடை அருகில் பிளாட்பார்மில் உட்கார்ந்துக்கொண்டு ஒரு ஆப் பாட்டிலை திறந்து பிளாஸ்டிக் டம்பளரில் சரக்கு ஊத்தி, தண்ணீர் கலந்து குடித்துள்ளார். இரண்டு ரவுண்ட் உள்ளே போய் போதையானதும் அவர் தன் இஷ்டம் போல் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

Advertisment

அப்போது அந்த வழியாக வந்த பள்ளி மாணவிகளிடம், சரக்கு டம்பளரை தூக்கி சியர்ஸ் எனச்சொல்லி மாணவிகள் பயந்து ஓடியுள்ளனர். இதனைப்பார்த்த அங்கிருந்த கடைக்காரர்களும், பொதுமக்களும் எச்சரித்துள்ளனர். அப்படியும் மீண்டும் அந்த வழியாக வந்த மாணவிகளிடம் கொச்சையாக பேச கோபமான பொதுமக்கள், அந்த குடிமகனை நாலு அடிப்போட்டதோடு காவல் நிலையத்துக்கு தகவல் தந்துள்ளனர். உடனடியாக வாலாஜாப்பேட்டை காவல்நிலைய காவலர்கள் வந்து அவரை எச்சரிக்க, போலிஸாரிடம் மல்லுக்கட்டியுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.