Advertisment

திருமண மண்டபத்தில் கைவரிசை காட்டிய நபரை கைது செய்த காவல்துறையினர்!

Police arrest man for theft at wedding hall

Advertisment

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோடு எதிரே உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 11.11.2021 அன்று திருமணத்துக்கு வந்த மொய் பை திருடு போனதாக வழக்குப் பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தது.

இந்நிலையில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே உதவி ஆய்வாளர் சௌந்தர்ராஜன், கதிரவன், பாலமுருகன் ஆகியோர் பகல் நேரத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நல்லாவூர், கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் ஜெயச்சந்திரன் (30) என்பவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதில் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் அவரிடமிருந்து ரூபாய் 1,31,000/- பணம், 2 கிராம் மோதிரம் 7, கால்காசு 3 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்தநபரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். அதன் பின்னர் சொத்தை உரியவரிடம் ஒப்படைக்க நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

police Theft villupuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe