Advertisment

வெடிகுண்டு மிரட்டல்; போதை ஆசாமியை கைது செய்த போலீஸ்

Police arrest man gave bomb threat trichy Railway junction

திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு கடந்த 23ஆம் தேதி நுண்ணறிவுப் பிரிவு காவலருக்கு குறுந்தகவல் மூலம் பெறப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக 3 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

Advertisment

திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றும் நுண்ணறிவுப் பிரிவு காவலர் பிரவீன் அடைக்கலராஜ் என்பவருக்கு வந்த குறுந்தகவலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், தகாத வார்த்தைகளால் பதிவிடப்பட்டு ஒரு ஆபாசமான வீடியோ பதிவு வாட்ஸ்அப் செயலி மூலம் அவருக்கு வந்துள்ளது.

Advertisment

இதனை தொடர்ந்து பிரவீன் அடைக்கலராஜ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் கே.கே.நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் புதுக்கோட்டை திருமயம் குழிபிறை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கஞ்சா போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe