இளம்பெண்ணை ஏமாற்றிய தீயணைப்பு வீரர்; கைது செய்த காவல்துறை

Police arrest fireman who cheated teenage girl

கடந்த 2019 ஆம் ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் மாரிமுத்து (32) என்ற வாலிபர், திருச்சி கொண்டையம் பேட்டை பகுதியில் மசாஜ் சென்டரில் பணியாற்றி வரும் கீர்த்திகா(28) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

மேலும் இருவரும் தனிமையில் இருந்ததாகவும், எனவே தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியதையடுத்து மாரிமுத்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். எனவே கீர்த்திகா கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வந்த மாரிமுத்து பணியை விட்டுவிட்டுத்தலைமறைவானார். அவரை தேடி வந்த காவல்துறையினர், அவரதுசொந்த ஊரான விழுப்புரத்தில்இன்றுகைது செய்தனர்.

arrested police trichy
இதையும் படியுங்கள்
Subscribe