Published on 12/01/2022 | Edited on 12/01/2022

மணப்பாறை வையம்பட்டி அடுத்த திம்மனூர் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடைபெறுவதாக வையம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சேவல் சண்டை நடத்திய பூசாரி பட்டியைச் சேர்ந்த தினேஷ்(20), சங்கர் (20 ), தவளை வீரன் பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் (30), கோடாங்கிபட்டி சேர்த்த ஜெயராம் (37), ஆசாத் ரோடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (28) உள்ளிட்ட 5 பேரை மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் பந்தயம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த வையம்பட்டி காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.