கஞ்சா வியாபாரிகளை கைது செய்த காவல்துறையினர்!

Police arrest cannabis dealers

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சந்தேகப்படும் படியாக ஒரு கார் நின்றுக்கொண்டிருந்தது. காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மணிராஜ் உள்ளிட்டபோலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றினர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரிகளான கோவிந்தராஜ், அருள் ஆனந்தன் ஆகியோரை உள்துறை காவல்துறையினர் கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்தனர்.

arrested Cannabis trichy
இதையும் படியுங்கள்
Subscribe