கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்று வட்டார இடங்களில் அதிகளவு கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.
அதனைத்தடுக்க போலீசார் தொடர்ந்து முயன்று வரும் நிலையில்கஞ்சா விற்பனை செய்யும் மணி என்ற இளைஞன்ஒருவன், " நான் பெங்களூர் மணி என்கிற மணிகண்டன் பேசுகிறேன். தற்போது நெய்வேலி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகிறேன். அதனை தடுக்க நினைக்கும் சுரேஷ் என்பவரை கொலை செய்ய போகிறேன்' எனவும், போலீசார் என்னைகைது செய்யமுடியுமா..? முடிஞ்சா புடிங்க பாப்போம் என சவால்விட்டு வீடியோ வெளியிட்டான்.கஞ்சா விற்பனையாளர், கஞ்சா குடிப்பவர் என அனைவரும் சேர்ந்து எடுத்து வெளியிட்ட அந்த வீடியோ வைரலானது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதனைத்தொடர்ந்து நேற்று காலை நெய்வேலி மந்தாரகுப்பம் சக்தி நகரில் இருந்த மணிகண்டனை கைது செய்ய மந்தாரக்குப்பம் போலிசார் சென்றனர். அப்போது திடீரெனஅவன்கையில் வைத்திருந்த பிளேடால் கை, வயிறு என உடலில் தன்னை தானாக கிழித்து கொண்டு வா வந்து பிடி பார்ப்போம் என கைது செய்ய வந்த போலீசாரை ஒருமையில் மிரட்டும் வகையில் அட்டகாசம் செய்தான்.
பின்னர் போலிசார் உறவினர்கள் ஒத்துழைப்புடன், வளைத்து பிடித்து அவனை கைது செய்தனர் தற்போது இந்த வீடியோவும் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.