
வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி சாலையில், சுரேஷ் என்பவருக்கு சொந்தமான விடுதியில் சட்டவிரோத சூதாட்டம் நடப்பதாக பாகாயம் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நாகராஜன் தலைமையிலான போலீசார் விடுதியில் சோதனை செய்தனர். அப்போது 13 பேர் கொண்ட குமபல் ரூபாய் நோட்டுகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த ராஜி (50), ஜெய்சங்கர் (54), ஆற்காடைச் சேர்ந்த ரவி (50), வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த சுரேஷ் (42), கணியம்பாடியை சேர்ந்த தினேஷ்குமார் (30), நராயணன் (50), சந்தோஷ் (29), சாய்நாதபுரத்தைச் சேர்ந்த பாபு (68), பாகாயத்தைச் சேர்ந்த முத்து (46), கார்த்தி (44), ஜெகதீசன் (33) அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த செல்வம் (43) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரை சேர்ந்த சத்தியமூர்த்தி (30) ஆகிய 13-பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணமும், 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார், 13 பேரையும் வேலூர் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.