இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். எனினும், சிலர் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றி வருகின்றனர்.

Advertisment

இதுவரை ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதற்காக 1.75 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, கரோனா பரவுதலின் ஆபத்தைக் குறித்தும், ஊரடங்கின் முக்கியத்துவம் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், சென்னை அண்ணா சாலை பகுதியில் மாநகர காவல்துறையினர் ஊரடங்கை மீறி வெளியில் வருவோர்களின் பைக்கில் கரோனா குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்களைக் கட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisment