Police are looking for the woman who left her newborn baby in the hospital!

புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை சில மணி நேரத்திலேயே விட்டுச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisment

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கு கர்ப்பிணியாக வந்த பெண்ணுக்கு செப்.17- ஆம் தேதி அழகான குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் குழந்தையை அங்கேயே விட்டு தப்பிச் சென்றுவிட்டார் அந்தப் பெண்.

Advertisment

அந்தப் பெண் தப்பிச் செல்லும் முன்பு கூறிய தகவல் அனைத்தும் பொய்யாக உள்ளதாக கூறுகின்றனர் காவல்துறையினர். தன் பெயர் ராணி, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிராமத்தில் பிறந்து மணப்பாறை அருகே உள்ள கருப்புகோயில் கிராமத்தில் சங்கர் என்பவரை திருமணம் செய்து வசித்து வந்த போது ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் கணவர் துபாய் சென்று விட்டார்.

குழந்தைகளை திருநெல்வேலியில் உள்ள எனது தங்கை மல்லிகாவிடம் வளர்கிறார்கள். வயிற்றில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்பதை பார்க்க இச்சடி சாமியாரிடம் வந்த இடத்தில் குறி பார்க்க வந்த போது வலி ஏற்பட்டு ராணியார் மருத்துவமனைக்கு வந்ததாகக் கூறியுள்ளார்.

Advertisment

ஆனால் பிறந்த குழந்தையை போட்டுவிட்டு சென்ற பிறகு ராணி சொன்ன முகவரியில் தேடிய போது, அந்த பெண் சொன்ன அனைத்து தகவல்களும் பொய் என்பது தெரிய வந்தது. அதனால் குழந்தையை குழந்தைகள் காப்பகத்திற்கு தூக்கிச் சென்ற அதிகாரிகள், புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பிறந்த குழந்தையை மருத்துவமனையிலேயே போட்டுவிட்டு தப்பிச் சென்ற பெண் யார் என்பது குறித்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.