அண்மையில் நடிகர் சூரி, நிலம் வாங்கித் தருவதாக தன்னிடம் பணம் மோசடி செய்ததாக ரமேஷ் குடவாலா,அன்புவேல்ராஜன் ஆகிய இருவர்மீது புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் புகார் அளித்தது தொடர்பாக நடிகர் சூரியிடம் அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் அவர் சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் அவரிடம் இது தொடர்பாக எழுத்துப்பூர்வ வாக்குமூலம் பெற்றுஇந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரமேஷ் குடவாலா,அன்புவேல்ராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீஸ் திட்டம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.