Police are hunt masked robber who stole jewellery andlaptop Trichy

Advertisment

கரூரில் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கார் கண்ணாடியை உடைத்து ட்ராவல் பேக்கில் இருந்த 8 பவுன் நகை, லேப்டாப்பை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், ஆதனூர் ஊராட்சி பால்மடைபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் - சரண்யா தம்பதியினர் கரூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள தனியார் உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வரும் போதுநிறுத்தி வைத்திருந்த அவர்களுக்குச் சொந்தமான காரின்கண்ணாடி உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காரில் இருந்த டிராவல் பேக்கில் 8 பவுன் நகை மற்றும் லேப்டாப் திருடப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தவர்கள், போலீசாரிடம்புகார் அளித்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் நகர போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்துள்ளனர்.

Advertisment

அதில், முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.