Advertisment

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு மெரினாவில் தடை போலீசார் குவிப்பு

சென்னை மெரினாவில் சுமார் ஆயிரம் எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

சென்னை மெரினாவில் ஆண்டுதோறும் இலங்கை முள்ளிவாய்க்காலில்2009-ஆம் ஆண்டு மே 18 இனப்படுகொலை செய்யட்ட லட்சக்கணக்கான தமிழகர்களுக்கு நினைவேந்தல்நிகழ்ச்சி நடத்தப்பட்டுவந்தது.ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் இனி மெரினாவில் போராட்டம் நடத்தஅனுமதி இல்லை என 41 எ சட்டப்பிரிவின் படி மெரினாவில் போராட்டம் நடத்த தடை உத்தரவை தமிழக அரசு வாங்கியுள்ளது.

Advertisment

may17

தற்போது நேற்று மே பதினேழு இயக்கமும் மற்றும் வைகோ உட்பட பதினோரு அமைப்புகளை சேர்ந்தவர்களும் நாளை திட்டமிட்டபடி மெரினாவில்நினைவேந்தல் கூட்டம்நடக்கும் என அறிவித்திருந்தனர்.இதை தொடர்ந்து தற்போது தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறிநினைவேந்தல் நடத்தப்படலாம் என்பதால் முன் எச்சரிக்கைக்காகதடுப்பதற்கு சுமார் ஆயிரம் போலீசார் சேப்பாக்கம்விருந்தினர் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி தடையைமீறி குவியும் கூட்டத்தை கைது செய்ய சுமார் 20 மாநகர பேருந்துகளும்,தடுப்புக்களும் ரெடியாகவைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றம் நீடித்துவருகிறது.

merina may17 Mullivaikal Memorial Day Mullivaikal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe