Skip to main content

பள்ளி கழிவறையில் இறந்த மாணவிக்கு ஞாயம் கேட்டு போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

காட்டுமன்னார்கோவில் அருகே மெய்யாத்தூர் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் துர்காதேவி என்ற மாணவி பள்ளியின் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் தூக்கிட்டநிலையில் புதனன்று இறந்துகிடந்தார். அதனை தொடர்ந்து மாணவியின் உடல் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

Police bathed against those who were fighting for the victim's death in the school toilet

 

இதனை தொடர்ந்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க கடலூர் மாவட்ட செயலாளர் தேன்தொழி தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் குமராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், பாலமுருகன் உள்ளிட்டோர் கிராம பொதுமக்களுடன் வியாழக்கிழமை  சம்பந்தபட்ட பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுதேவன், சத்துணவு பொறுப்பாளர் விக்டர் ஆகிய இருவரும் முன்னுக்கு பின் தகவல்களை கூறியுள்ளனர்.
 

பின்னர் மாணவி சாவில் இவர்களுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உடற்கூறு ஆய்வு முடித்து வந்த மாணவியின் உடலை வைத்துக்கொண்டு மெய்யாத்தூர் கிராமபொதுமக்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் காட்டுமன்னார்கோவில் – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தவர்த்தாம்பட்டு என்ற இடத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

இதனால் ஒரு மணி நேரத்திற்குமேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின் அங்கு வந்த சேத்திய தோப்பு காவல்துறை  துணை கண்காணிப்பாளர் ஜவகர்லால்நேரு தலைமையிலான காவல்துறையினர் போராட்டகார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மக்கள் கலைந்து செல்லாததால், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். 
 

இதனால் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் முதியவர்கள் செய்வதறியாது சிதறி ஓடினர் இதில் சிலபேர் கிழே விழுந்ததால் லேசான காயங்கள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாதர் சங்க மாவட்ட செயலாளர் தேன்மொழி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், பாலமுருகன் உள்ளிட்ட அந்த கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து குமராட்சி காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிய பள்ளி மாணவி!

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
schoolgirl who worked as a conductor in a government bus

கர்நாடக மாநிலம் அப்சல்பூர் கட்டஹாரா கிராமத்தைச் சேர்ந்த வித்யா 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி வித்யாவிற்கு பேருந்து நடத்துநராகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி வித்யா தன்னுடைய நடத்துநர் ஆசை குறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மாணவி வித்யாவின் ஆசையைக் கேட்ட அதிகாரிகள் அதனை நிச்சயம் நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளனர். முதலில் மாணவி வித்யாவிற்கு எவ்வாறு பயணச்சீட்டு கொடுக்க வேண்டும் என்று பயிற்சி கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவி வித்யா கட்டஹாரா வரை செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணி செய்ய அனுமதி அளித்தனர். 

பின்னர், அதன்படி அப்சல்பூரில் இருந்து கட்டஹாரா வரை செல்லும் அரசுப் பேருந்தில் மாணவி வித்யா நடத்துநராகப் பணி செய்தார். அவருடன் நடத்துநரும் இருக்கையில், பயணிகளிடம் எங்கு செல்கிறார்கள் என்று கேட்டு, உரிய பயணச்சீட்டை வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் மாணவிக்கும், அவரின் ஆசையை நிறைவேற்றிய போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இணையவாசிகள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

விடுமுறைக்கு வந்த சிறுமியை தவறான பாதைக்கு உட்படுத்திய அத்தை; போக்சோவில் நடவடிக்கை எடுத்த போலீஸ்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
 The aunt who took the vacationing girl astray; Police take action in POCSO

சென்னையில் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை உள்ளிட்ட மூன்று பெண்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் செய்த சோதனைகளின் அடிப்படையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்தாண்டு காலாண்டு தேர்வு விடுமுறையில் அத்தை வீட்டிற்கு வந்திருந்த சிறுமியை அத்தை மற்றும் மூன்று பெண்கள் சேர்ந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை மற்றும் மூன்று பெண்களை கோயம்பேடு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.