/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ganj.jpg)
கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா அரசுப் பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வருவதாகப் கேரளா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கேரளா மாநிலம், வாளையார் சுங்கச்சாவடி பகுதி அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில், கல்லூரி மாணவர் மற்றும் மாணவி ஆகியோர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் 14 கிலோ கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், மலப்புரத்தைச் சேர்ந்த ஆல்பின் மற்றும் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷீபா என்பது தெரியவந்தது.
மேலும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா கடத்திய இவர்கள், ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு கஞ்சாவை எடுத்து கேரளா அரசுப் பேருந்து மூலம் கேரளாவிற்கு கடத்த முயன்றுள்ளனர் என்பது தெரியவந்தது. கஞ்சா கடத்திய இருவரையும் கைது செய்த போலீசார், இருவருடன் வந்த மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)