police action taken for pongal gift incident at  trichy district 

திருச்சியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பூட்டை உடைத்து பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படவிருந்த பச்சரிசிமற்றும் சர்க்கரையை இரு வாலிபர்கள் திருடிய சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

திருச்சி பாலக்கரை பகுதியில்அமராவதி ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் விற்பனையாளராக திருச்சி செந்தண்ணீர்புரத்தைச் சேர்ந்த சரளா என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கடையைப் பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோது ரேசன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது பொங்கல் தொகுப்பில் வழங்க இருப்பு வைக்கப்பட்டு இருந்த பச்சரிசி மற்றும் சர்க்கரைஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisment

இது குறித்து சரளா பாலக்கரை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பூட்டை உடைத்து திருடியதாக தர்மா என்கிற தர்மராஜ் (வயது 29), தினேஸ்வரன் (வயது 23) என இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், திருவரங்கம் சத்திரப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த தீபன் என்பவரது இருசக்கர வாகனத்தைத்திருடியதாக இவர்கள் இருவருடன் விஷ்வா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.