/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/wheeling.jpg)
இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்தபடியேபட்டாசு வெடித்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் பட்டாசு வெடித்துக்கொண்டே வீலிங் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்தபடியே பட்டாசு வெடித்த விவகாரத்தில் விதிமீறலுக்கு உதவியதாக திருச்சி கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என்பவரை, திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வீலிங் செய்த தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)