Kodanadu affair police action

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அவதூறு பரப்பியதாகதெகல்கா பத்திரிகை ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயானைபிடிக்க தனிப்படை விரைந்துள்ளது.

Advertisment

நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக எடப்பாடி பழனிச்சாமி,கொடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை. மறைந்த ஜெயலலிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை வன்மையாக கண்டிக்கிறோம். வீடியோ ஆவணம் குறித்து புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Advertisment

தவறான செய்தி வெளியிட்டவர்கள், வீடியோ விவாகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது விரைவில் கண்டறியப்படும். கொடநாடு சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவல்களை பரப்புகின்றனர். இவ்வாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து கோடநாடு கொள்ளை வழக்கில் வீடியோ வெளியிட்ட தெகல்கா பத்திரிகையின் ஆசிரியர் மேத்யூசாமுவேலை பிடிக்க எஸ்.பி செந்தில்குமார் தலைமையில்தனிப்படை டெல்லி சென்றுள்ளது. அதேபோல் கொள்ளையில் ஈடுபட்ட சயான் மற்றும் ரவியை பிடிக்ககேரள விரைந்தது தனிப்படை.

Advertisment