ADVERTISEMENT

’என் சாவுக்கு காரணம் அந்த மூன்று நபர்களே..’-தற்கொலைக்கு முயன்ற முதல் திருநங்கை காவலர்

11:02 AM Dec 04, 2018 | nagendran

ADVERTISEMENT

ADVERTISEMENT

"என்னுடைய ஒழுக்கத்தையும், என்உடலமைப்பையும் கேலி கிண்டல் செய்ததாலே தற்கொலைக்கு முயன்றேன். என்னுடைய சாவிற்கு காரணம் அந்த மூன்று பேரே.!" என எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயல்வதை வீடியோவாக்கி வாட்ஸ் அப்பில் உலவ விட்டுள்ளார் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முதல் திருநங்கை காவலரான நஸ்ரியா.

இரண்டாம் நிலை காவலர் பணிக்காக சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய அனைத்துத் தேர்விலும் கலந்துக் கொண்டு வெற்றிப்பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் இணைந்து பணியாற்றி வந்தார் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்த நஸ்ரியா. நாட்டிலேயே முதல்முறையாக திருநங்கை ஒருவர் தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக சேலத்தை சேர்ந்த பிரித்திகா யாசினிக்கு அடுத்த முதல் திருநங்கை காவலரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ராமநாதபுரம் ஆயுதப்படையில் ஓ.எஸ்.அலுவலகப்பணிப் பார்த்து வந்த நிலையில், நேற்றிரவு அவரின் தற்கொலை வீடியோவினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்காட்சியில், " ஆயுதப்படையில் சீனியர் ரைட்டராகப் பணியாற்றி வரும் பார்த்திபன், ஆயுதப்படை எஸ்.ஐ.ஜெயசீலன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் திருநங்கை என்பதால் தொடர்ச்சியாக என்னுடைய உடலமைப்பையும், ஒழுக்கத்தையும் கேலி செய்து வருகின்றனர். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகின்றேன். என்னுடைய தற்கொலைக்குக் காரணம் அந்த மூன்று நபர்களே.!" என்றவர் தொடந்து, " இதோ எலி மருந்து.! இதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போகின்றேன்." எனக்கூறிவிட்டு, அந்த எலி மருந்தை தண்ணீர் பாட்டிலில் கலந்து குடித்துவிட்டு கேமராவை அணைக்கின்றார்.

இந்த வீடியோ வாட்ஸ் அப் மூலம் அனைத்து காவலர்களுக்கும் ஒரே நேரத்தில் சென்றடைய, திருநங்கை காவலர் நஸ்ரியா தற்பொழுது சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் காவலர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பரப்பரப்பு உண்டாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT