Advertisment

மாறுவேடத்தில் கலக்கும் காவல்துறை உதவி ஆய்வாளர்! கதிகலங்கிய கள்ளசாரய வியாபாரி!

police

Advertisment

police

கடலூர் மாவட்டம் நெய்வேலி உட்கோட்டத்திற்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரசன்னா. குறிஞ்சிப்பாடியில் கள்ளச்சாராயம் விற்பனையாகவதாக தகவல்கள் வந்தது. இதையடுத்து கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க ரகசிய ஆலோசனை நடத்திய அவர், மாறுவேடம் அணிந்து கள்ளச்சாராயம் விற்பனை நடக்கும் மாருதி நகருக்கு சென்றுள்ளார்.

மாருதி நகரை சேர்ந்த சதிஷ்குமார் வயது (26) என்பவரை பிடித்தார். மேலும் அவரிடம் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Advertisment

குறிஞ்சிப்பாடி காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா அவர்களின் இந்த நடவடிக்கைகள் கள்ளசாராய வியாபாரிகளை கதிகலங்க செய்துள்ளது. மாறுவேடத்தில் சென்று கள்ளச் சாராயம் விற்பனை செய்தவரை கைது செய்ததை பார்த்த பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe