r

விக்கிரவாண்டி அருகே கேஸ் வாகனத்தில் தவற விட்ட 2 நபர்களின் 31 ஆயிரம் ரூபாயை போலீசார் மீட்டு கொடுத்தனர்.

Advertisment

Advertisment

ஊரடங்கில் போக்குவரத்து வசதி இல்லாததால், சென்னையில் இருந்து தொழிலாளர்கள் கேஸ் வாகனத்தின் மூலம் கும்பகோணம் நோக்கி சென்றனர். அப்போது ஓங்குர் சோதனைசாவடியில் காவல்துறை சோதனைக்கு பயந்து அவசரமாக நள்ளிரவில் கீழே குதித்து தப்பி ஓடினர். பின்னர்தான் அவர்கள் கொண்டு வந்த பையை கேஸ் வாகனத்தில் தவற விட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.உடனே, அங்கிருந்து காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கவே, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டது.

7 மணி நேர சோதனைக்கு பிறகு விக்கிரவாண்டி சோதனைசாவடியில் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் அந்த கேஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அதில் இருந்த 2 பைகளில் 29 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் இருந்தது. இரண்டு பைகளையும் உரியவரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றார்கள்.