nakkheeran

திருமங்கலம் சட்டஒழுங்கு உதவி ஆணையரான கமில்பாஷா லஞ்ச ஒழி்ப்பு போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். மேலும் சில காவல்துறை அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment

இவரின் முகத்திரையை பிப்ரவரி 04-06-2017 ஆம் ஆண்டு வெளிவந்த நக்கீரன் வெளிச்சம் போட்டு காட்டியது.

Advertisment

சென்னையில் மாணவர்கள் போராட்டம் என்றால் அது மெரினாவில் கூடிய ஜல்லிக்கட்டு போராட்டம்தான். அந்த போராட்டதில் 23ஆம் தேதி மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மயிலாப்பூர் காவல்நிலையத்தின் பின்புறம் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அமைந்துள்ளது ரூதர்புரம். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கடற்கரையில் இருந்து ஓடிவந்து ரூதர்புரத்தில் நுழைந்தனர்.

police

அந்த ரூதர்புரத்தில் நுழைந்த மாணவர்களை போலீசார் தேடினர். ராதாகிருஷ்ணசாலையில் 300 போலீஸ் குவிந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த அண்ணா நகர் துணை ஆய்வாளர் பெரோஸ்கான் அப்துல்லா, திருமங்கலம் உதவி ஆணையர் காமில் பாஷா ஆகியோர் முதலில் அங்கிருந்த சிசிடிவி கேராவை உடைத்தனர். அதன்பிறகு பத்திரிக்கையாளரைகளை தாக்கி, பின்னர் அங்கிருந்த ஆட்டோவுக்கு தீ வைத்து காவல்துறையே கலவரத்தை தூண்டியது. அதற்கு முழுகாரணமாக இருந்தவர் இந்த கமில் பாஷா என்பதை நக்கீரன் சுட்டிகாட்டியது. “இதோ… ஆட்டோவுக்கு தீ வைத்த போலீஸ்!” என்ற தலைப்பில் நக்கீரன் வெளிய்ட்டது.

Advertisment

கமில் பாஷா பணி ஓய்வுபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் தன்னுடைய பதவி முடிவதற்குள் தனக்கான ஆதாயத்தை பார்த்துக்கொள்ளாலாம் என்று பல வகையிலும் தனது கைவசத்தை காட்டி வந்தார்.

இந்த நிலையில் தான் கொடுங்கையூரைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் செல்வம், தன்னுடைய பில்டிங் காண்ராக்ட் பிரச்சனையில் தீர்வுக் காணுவதற்காக பாஷாவிடம் பேச, பாஷா அதற்காக 6 லட்சம் எடுத்து வரச்சொல்ல அதே போல் செல்வமும் 13-ம் தேதி இரவு 8 மணி அளவில் பணம் கொண்டு சென்றுள்ளார். இருவரும் பணம் பறிமாற்றிக்கொள்ள, 8.40 திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் டிஎஸ்பி லவக்குமார் தலைமையிலான படை கமில் பாஷா அறையில் சோதனையிட்டனர். சோதனையின் போது கமில் பாஷா அறையில் உதவி காவல் ஆணையர் கமில் பாஷாவிடமிருந்து ரூ.2.5 லட்சம் ரொக்கப் பணமும், காண்ட்ராக்டர் செல்வத்திடமிருந்து ரொக்கப் பணம் ரூ.2.53 லட்சமும் கைப்பற்றினர்.

police

அப்போது அவர்களை கைது செய்யாத போலீஸார், பின்னர் அவர்கள் இருவரையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர். அதன்பிறகு விசாரனையில் மூலமாக இவர்களிடம் வைத்திருந்த பணம் எந்த விதமான ஆதாரமும் இல்லாத காரணத்தால் லஞ்சம் வாங்கியது உண்மை என்ற முறையில் குற்றப்பிரவு 102 ,ஊழல் தடுப்பு பிரிவில் 13,(2) 13,(1) d கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு அரசு பணியில் இருப்பவர்கள் லஞ்சம் புகாரில் ஈடுப்பட்டிருந்தாலோ அது நிருபணமாகியிருந்தாலோ அவர்கள் மீது துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்வது வழக்கமாக எடுக்கப்படும் நடவடிக்கையே. இவர் மீதும் அதே நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

இதே வழக்கில் உதவி ஆணையர் கமில் பாஷாவின் தனிப்படையில் பணியாற்றும் ஜெஜெ நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன், குற்றப்பிரிவு தலைமை காவலர் ஜெகன், காவலர் சொக்கலிங்கம், வாகன ஓட்டுநர் தேவேந்திரன்,காவலர் ஆர்.ராஜேஷ் ஆகியோரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். விரைவில் அவர்களின் மீதும் வழக்கு பாயும் என்று லஞ்சம் ஒழிப்பு போலீசார் தெரிவிக்கின்றனர்.