பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு அளித்தனர். திருநாவுக்கரசுவின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய நிலையில் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
சிபிசிஐடி போலீசாரின் மனு இன்று கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து இன்று திருநாவுக்கரசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.