Skip to main content

மீண்டும் காவிரியாற்றில் கலக்க தொடங்கியது "விஷக் கழிவு"                  

Published on 01/06/2020 | Edited on 01/06/2020
 “Poisonous Waste” Begins to Mix Back in Cauvery


கரோனா வைரஸ் மனித குலத்திற்கே கொடூர அரக்கனாக இருந்தாலும் ஒரு வகையில் கடந்த இரு மாதமாக அது நன்மை ஒன்றை செய்துள்ளது என்கிறார்கள் ஈரோடு மாவட்ட மக்கள் அது என்னவென்றால்..,


ஊரடங்கு என்ற பொதுமுடக்கத்தால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டது. தொழில் நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை.  ஈரோடு மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சாய, சலவை ஆலைகளும், ரசாயன கெமிக்கல் தொழிற்சாலைகளும், தோல் தொழிற்சாலைகளும் உள்ளது. இந்த தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீர் எதையும் சுத்திகரிக்காமல் தொழிற்சாலை கழிவு நீராய், கூடுதலாக விஷக் கழிவு நீராகவும் மாறி அதை அப்படியே காவேரி ஆற்றிலும், காளிங்கராயன் வாய்க்காலிலும் வெளியேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளது இந்த தொழிற்சாலைகள்.

ஊரடங்கு முடக்க காலத்தில் தொழிற்சாலைகள் செயல்படாததால் அதிலிருந்து விஷக் கழிவு நீர் வெளியேற்றப்படவில்லை. இதனால் சென்ற இரு மாதங்களாக காவிரி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் நீர் சுத்தமாக வந்தது. இப்போது ஈரோட்டில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஈரோடு மாநகரை சுற்றியுள்ள சாய, சலவை, தோல் ஆலைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. பொதுமுடக்கத்தில் காவிரி ஆறு அதனுடைய இயல்பு நிலையை அடைந்து சுத்தமாக காட்சியளித்தது. மக்களுக்கு தேவையான குடிநீரும் சுத்தமாக வந்தது.

 

 


இப்போது சென்ற வாரத்திலிருந்து சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளில் இருந்து விதிமுறைகளை மீறி கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே ஈரோட்டில் ஓடும் ஓடைகளில் திறந்து விட்டனர். இதனால், அனைத்து ஓடைகளிலும் சாய, சலவை, தோல் ஆலைகளின் கழிவு நீரே பெருமளவு ஓடியது. எந்த வகையிலும் சுத்திகரிப்பு செய்யாமல் காளிங்கராயன் வாய்க்கால், அருகே ஓடும் பிச்சைக்காரன் ஓடையில் நேரடியாக கலந்தது. இதனால், அப்பகுதி முழுக்க கழிவு நீர் செல்லும் பாதை எங்கிலும் நுரையுடன் சென்றது. இந்த விஷகழிவு நீர் பிச்சைக்காரன் ஓடையின் வழியாக காவிரி ஆற்றில் தான் கலக்கிறது. இதனால் காவிரி ஆறு அதிகளவில் மாசுபட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டிய மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலைகளில் பெறப்படும் அன்பளிப்புகளால் அலட்சியமாக இருக்கிறார்கள். இதனால் தினந்தோறும் தொழிற்சாலைகளின் கழிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும், இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய முறையில் ஆய்வு நடத்தி சாய,சலவை விஷ கழிவு நீரினை வெளியேற்றும் ஆலைகளின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான மாணவர்கள்; சடலமாக மீட்பு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
3 students missing who bathed in Kollidam river

கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது வழியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மாணவர்கள் குளித்துள்ளனர். அச்சமயம் மாணவர்கள் பச்சையப்பன் என்பவர் ஆற்றில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து மற்ற மாணவர்கள் பச்சையப்பனை காப்பற்ற முயன்று ஆற்றில் இறங்கியுள்ளனர். இதனால் பச்சையப்பனுடன் 8 மாணவர்களும் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கவனித்த பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Date Notification for Cauvery Management Commission Meeting

கடந்த ஜனவரி 18 ஆம் நடந்த ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாதத்தில் வினாடிக்கு ஆயிரத்து 182 கன அடி வீதம் 2.76 டிம்சி தண்ணீரும், பிப்ரவரி மாதத்திற்கு 998 கன அடி வீதம் மொத்தமாக 5.26 டிஎம்சி நீர் கார்நாடக அரசின் சார்பில் திறக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக அரசின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடந்த கூட்டத்திற்குப் பிறகு வரும் 1 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.