Advertisment

புதிதாகக் கட்டப்பட்ட கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு; மூவர் உயிரிழப்பு

Poisonous gas in a newly constructed septic tank; Three casualties

கரூர் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கரூர் செல்லாண்டிப்பாளையம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்த போது விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கரூர் மாவட்டம் செல்லாண்டிப்பாளையம் பகுதியில் உள்ள சுக்கிலியாவூர் காந்தி நகரில் புதிய வீடு கட்டும் பணி நடந்தது. வீட்டிற்கு 2 வாரம் முன்னதாக கழிவுநீர்த் தொட்டி கட்டப்பட்டது. இதில் மீதமிருந்த பலகைகளைப் பிரிக்கும் பணிகளில் இன்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Advertisment

பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே தொழிலாளர்களை விஷவாயு தாக்கியது. இதில் மோகன்ராஜ், ராஜேஸ் மற்றும் சிவக்குமார் ஆகிய மூவர் மயக்கமடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று பேரும் இறந்துவிட்டதாகத்தெரிவித்தனர். புதிதாகக் கட்டப்பட்ட கழிவுநீர்த் தொட்டியில் எவ்வாறு விஷவாயு தாக்கியது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe