govai

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

கோவையில் விஷவாயு தாக்கி துப்புரவு பணியாளர் உயிரிழந்த சம்பவத்தில், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய பணியமர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதிதமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை காந்திபுரம் நூறடி சாலையில் மாணிக்கவாசகம் என்ற இந்தியன் வங்கி மேலாளரின் வீட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது, மகேந்திரன் என்ற தனியார் துப்புரவு பணியாளர் விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தார். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, குறைந்த தொகைக்கு தனியார் துப்புரவு பணியாளர்களை ஈடுபடுத்தியதே உயிரழப்பிற்கு காரணமென புகார் எழுந்தது.

Advertisment

இந்நிலையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய பணி அமர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆதித்தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அப்பணியில் ஈடுபடுத்தியவர்களை காவல் துறையினர் தப்பிக்க வைக்க முயல்வதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கட்சியினர் தெரிவித்தனர்