Poison in Temple Guard Wine; Priest arrested

கோவிலில் சாமிக்கு படையலில் வைக்கப்பட்ட மதுவை குடித்த ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் கோயில் பூசாரிகைது செய்யப்பட்ட சம்பவம்நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

நாகர்கோவில் வடலிவிளை பகுதிகளில் அமைந்துள்ளது ஸ்ரீ சுடலைமாடசாமி திருக்கோயில். இந்த கோவிலில், கோவில் கணக்கு தொடர்பாக நிர்வாகிகளுக்கும், அருள் என்ற நபருக்கும் இடையே மோதல்போக்குஇருந்தது வந்துள்ளது. கோவில் கணக்கை அவ்வப்போது கேட்டு அருள் என்பவர் கோவில் நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பி வந்தார்.

Advertisment

இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி சுடலைமாட சாமி கோவிலில் வைக்கப்பட்ட படையலில், மது வைக்கப்பட்டது. அந்த மது தனக்கு தான் வேண்டும் என அருள் பிரச்சனை செய்துள்ளார். அப்பொழுது கோவில் பூசாரி சதீஷ் ஏற்கெனவே அவர்களுக்குள் இருக்கும் முன் விரோதத்தைமனதில் வைத்து படையல் மதுவில் விஷத்தை கலந்து வைத்துள்ளார். ஆனால், அதை அருள் குடிப்பதற்கு முன்பாக செல்வகுமார் என்பவர் தெரியாமல் குடித்துள்ளார். இதில் செல்வகுமார் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

செல்வகுமாரின் உயிரிழப்பு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுநடத்தப்பட்ட விசாரணையில், கோவில் படையலில் வைக்கப்பட்ட மதுவில் விஷம் கலக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கோவில் பூசாரி சதீஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment