Advertisment

அரசு பள்ளி கழிவறையில் விஷ பாம்பு கடி... தீவிர சிகிச்சையில் மாணவி

Poison snake bite school girl

அரசு பள்ளி மாணவியை விஷப் பாம்பு கடித்து அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்திருக்கும் சம்பவம் மன்னார்குடி பகுதி வாழ் பொதுக்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Advertisment

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபேந்திரன். இவர், விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். இளையமகள் நவரஞ்சினி அருகில் உள்ள சவளக்காரன் அரசினர் மேல்நிலைப் பள்ளியல் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இன்று கலையில் பள்ளிக்கு வந்தவர் அங்குள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். கதவுக்கு இடுக்கில் இருந்த விஷப்பாம்பு ஒன்று கடித்து நவரஞ்சனியை நிலைகுலைய செய்துள்ளது. மாணவியின் அழுகை சத்தம் கேட்டு ஆசிரியைகள் கழிவறை அருகே ஓடி பார்த்தபோது நவரஞ்சினிக்கு பாம்பு கடித்தது தெரிந்துள்ளது. நவரஞ்சனியை ஆசிரியர்கள் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisment

Thiruvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe